நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த 34 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்க…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த 34 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறைச்சாலையின் பெண்கள் பிரிவை சேர்ந்த பெண் கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை தொடர்ந்து, ஆண்களும் சிறைச்சாலை கட்டிடங்களின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் குதித்தனர். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், மேலதிக வன்முறைகளை தடுக்கவும் சிறைச்சாலை வளாகத்தை சுற்றி பெருமளவிலான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.