திருகோணமலையில் உள்ள நிலாவெளி கடற்கரையில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலாவெளி கடலில் நீராடி சுதந்திரமாக தங்கள் பொழுதுபோக்கை கழித்து வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்புக்காக இந்நிலையில், இங்கிருந்து கடல் மார்க்கமாக பயணித்து…

திருகோணமலையில் உள்ள நிலாவெளி கடற்கரையில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலாவெளி கடலில் நீராடி சுதந்திரமாக தங்கள் பொழுதுபோக்கை கழித்து வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்புக்காக இந்நிலையில், இங்கிருந்து கடல் மார்க்கமாக பயணித்து பார்க்க வேண்டிய தேசிய பூங்காக்களில் ஒன்றாக புறாத் தீவும் முக்கியம் பெற்று சிறந்து விளங்குகிறது. வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த தீவை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். குறித்த தீவுக்கு படகு மூலமாக பயணிக்க வேண்டியுள்ளதால் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட பகுதியில் அனுமதிக்கான படகு கட்டணமாக ரூ.8000 அறவிடப்படுகிறது. இதன் மூலமாக அந்நியச் செலவாணிக்கு பெரிதும் குறித்த சுற்றுலா தளம் பெரிதும் பங்காற்றி வருகிறது. பயணிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் பிரிவின் உயிர் பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.