ஹரக் கட்டா என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரொருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரொருவர் மற்றும் ஒரு பிரதம பொலிஸ் இன்ஸ…

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரொருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரொருவர் மற்றும் ஒரு பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு எதிரான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் துறையும், லஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் தற்போதைக்குத் தீவிரமாக முன்னெடுத்துள்ளது.ஐந்து மில்லியன் ரூபாய் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறித்து பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாகவும், ஹரக் கட்டாவிடம் இருந்து அவர் சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்ளவும், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவும் குற்றப் புலனாய்வுத் துறையும், லஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.