பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முகமது அலி, ஆறாவது பாகிஸ்தான்–இலங்கை ஆயுதப்படை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்தார். வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவரது த…
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முகமது அலி, ஆறாவது பாகிஸ்தான்–இலங்கை ஆயுதப்படை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்தார்.
வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவரது தூதுக்குழுவினரை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ஹர்ஷ விதானாரச்சி, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த உயர்மட்டப் பாதுகாப்பு கலந்துரையாடல், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில், கடற்படை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யவும், பிராந்திய பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு பயிற்சி மற்றும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களை ஆராயவும் இந்த கலந்துரையாடலில் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முகமது அலி அவர்கள், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொந்த ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

