பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி கற்கும் துறவி/துறவல்லாத மாணவர்களுக்கு ஒரு சோடி பாதணியை வழங்கும் வேலைத்திட்டம், 2026 ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 836,571 மாணவர்களை உள்ளடக்கி அமுல்படுத்தப்பட்டது. 2027 ஆம் ஆண்டுக்கான இந்த வேலைத்திட்டத்தை, 2026 ஆம் ஆண்…
பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி கற்கும் துறவி/துறவல்லாத மாணவர்களுக்கு ஒரு சோடி பாதணியை வழங்கும் வேலைத்திட்டம், 2026 ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 836,571 மாணவர்களை உள்ளடக்கி அமுல்படுத்தப்பட்டது.
2027 ஆம் ஆண்டுக்கான இந்த வேலைத்திட்டத்தை, 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணை முடிவடையும் போது பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகக் கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட முறையின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, பின்வரும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:
மேல் மாகாணம், தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில், உள்ளூர் பாதணி உற்பத்தியாளர்கள் பாடசாலைகளுக்கே நேரடியாக வந்து பாதணிகளை வழங்கி, அவற்றை கொள்வனவு செய்தல். மத்திய மாகாணம், வடக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில், அந்தந்த சந்தைகள் ஊடாகப் பாதணிகளைக் கொள்வனவு செய்தல். தெரிவு செய்யப்படும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களிலுள்ள துறவி/துறவல்லாத மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபாய் பெறுமதியான பரிசுச் சீட்டொன்றை வழங்கி, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

