சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. பாதாள உலகக் குழுத் தலைவரான கெஹெல்பத்தர பத்மே என்பவருடன் தொலைபேசித் தொடர்புகளை பேணியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை இடம்பெற்ற…
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவரான கெஹெல்பத்தர பத்மே என்பவருடன் தொலைபேசித் தொடர்புகளை பேணியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
வருண ஜயசுந்தர நூற்றுக்கும் அதிக முறை கெஹெல்பத்தர பத்மேயுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளாதாக தெரியவந்துள்ளது.
பாதாள உலகக் குழு கெஹெல்பத்தர பத்மே இந்தோனேசியாவில் இருந்த காலப்பகுதியிலேயே இந்த தொலைபேசித் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இந்தத் அழைப்பு மேற்கொள்ளப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தொடர்புகள் காரணமாக இந்த அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கெஹெல்பத்தர பத்மே தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

