கொழும்பு கோட்டைப் பகுதிக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில், பாதசாரி கடவை கடக்க முயன்ற பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பு கோட்டைப் பகுதிக்கு அருகிலுள்ள பாதசாரி க…
கொழும்பு கோட்டைப் பகுதிக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில், பாதசாரி கடவை கடக்க முயன்ற பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பு கோட்டைப் பகுதிக்கு அருகிலுள்ள பாதசாரி கடவையைப் பயன்படுத்தி வீதியைக் கடக்க முயன்ற போதே, அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் கோட்டைப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நகரின் முக்கிய பகுதிகளில் வீதியைக் கடக்கும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வாகனச் சாரதிகள் பாதசாரி கடவைகளில் முன்னுரிமை அளித்து வாகனங்களைச் செலுத்துமாறும் பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

