கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சுமார் 470 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை பாதயாத்திரையாக கடந்து வரும் "சுப்பிரமணி" என்ற செல்லப்பிராணி நாய், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மனிதர்களைப் போல மாமிசமற்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் இந்த நாய், முல்லைத்தீவு மாவட்…
கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சுமார் 470 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை பாதயாத்திரையாக கடந்து வரும் "சுப்பிரமணி" என்ற செல்லப்பிராணி நாய், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மனிதர்களைப் போல மாமிசமற்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் இந்த நாய், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பயணத்தைத் தொடர்ந்து தற்போது அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.அனுமதி மறுப்பு இந்நிலையில், கதிர்காம காட்டுப்பாதை வழியாகவும் சுப்பிரமணியை அழைத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு பாதயாத்திரை குழுவின் தலைவர் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சுற்றாடலியலாளர் கந்தையா பிரியதர்சனி, பாதயாத்திரையில் செல்லப்பிராணி கலந்து கொள்வதற்கு திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், காட்டுப்பகுதிக்குள் நாயை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
காட்டுப்பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பு மட்டுமல்லாது, சுப்பிரமணியின் உயிர் பாதுகாப்பும் முக்கியமாக கருதப்படுவதால், காட்டுப்பாதைக்குள் அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் விளக்கமளித்தார்.சுப்பிரமணி எனும் நாய் எனினும், ஜூலை 10ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்ட பின்னர், சுற்றாடலியலாளர்கள் குழு சுப்பிரமணியை பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்துச் சென்று, கதிர்காமத்திற்கான முனையமான பிள்ளையாரடி பகுதியில் பாதயாத்திரை குழுவிடம் மீண்டும் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், உகந்தை காட்டுப்பாதை ஆரம்பிக்கும் பாணமை பகுதியில் அண்மையில் இரண்டு விவசாயிகள் சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்ததுடன், இரண்டு செல்லப்பிராணிகளும் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.You may Like This..

