முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுஜீஸ்வர பண்டார, இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுஜீஸ்வர பண்டார சிறைச்சாலை அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கோட்டை நீ…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுஜீஸ்வர பண்டார, இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுஜீஸ்வர பண்டார சிறைச்சாலை அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு அமைவாக, கடந்த ஜூன் 18 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, சுஜீஸ்வர பண்டார விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

