கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுதிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட…
கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது.
அதன்படி, பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுதிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பல்கலைக்கழகம் ஜூலை 13 அன்று மீண்டும் திறக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.அதேவேளை நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய (1) நாளில் மாத்திரம் 1025 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை 56,422 ஆக அதிகரித்துள்ளது.

