கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். ரஜீவன் கம்சத்வனி என்ற 6 வயதுடைய சிறுமியே இந்த உலக சாதனையை நிலைநாட்டினார். குறித்த நிகழ்வு ​நேற்று முன் தினம் (28) கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது. இதன்போது சிறுமி ரஜீவன் கம்சத்வனி 2…

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். ரஜீவன் கம்சத்வனி என்ற 6 வயதுடைய சிறுமியே இந்த உலக சாதனையை நிலைநாட்டினார்.

குறித்த நிகழ்வு ​நேற்று முன் தினம் (28) கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது. இதன்போது சிறுமி ரஜீவன் கம்சத்வனி 2 மணி 30 நிமிடம் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி உலக சாதனையை நிகழ்த்தினார்.

குறித்த சாதனையானது, ராபா உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ்வரனால் "உலக நாட்டிய இளவரசி" என்று மகுடம் சூட்டி வைக்கபட்டது.

இந்த நிகழ்வில் ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன், ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பங்குபற்றினர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.