பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, பதுளை பகுதியில் , வழமையாக உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும் தானசாலைக்கு மத்தியில், முச்சக்கர வண்டிகளுக்கு இலவசமாக கிரீஸ் பூசும் சேவை முன்னெடுக்கப்பட்டது. பதுளை பகுதியில் உள்ள வாகன பொறியியல் நிறுவனம் ஒன்றினால் இந்த தானசாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்…
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, பதுளை பகுதியில் , வழமையாக உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும் தானசாலைக்கு மத்தியில், முச்சக்கர வண்டிகளுக்கு இலவசமாக கிரீஸ் பூசும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
பதுளை பகுதியில் உள்ள வாகன பொறியியல் நிறுவனம் ஒன்றினால் இந்த தானசாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முச்சக்கர வண்டிகளுக்கு மகிழ்ச்சியைத் தரும் கிரீஸ் தானசாலை" என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சி, அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து, தானசாலையின் சேவையைப் பெறுவதற்காக முச்சக்கர வண்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.
இவ்வாறான சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய தானசாலைகள் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

