பேருவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்கத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டித் தொடரின் போது, துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த 46 வயது நபர் ஒருவர் திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேரடி சாட்சிகள் மற்ற…

பேருவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்கத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டித் தொடரின் போது, துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த 46 வயது நபர் ஒருவர் திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேரடி சாட்சிகள் மற்றும் சம்பவத்தின் போது நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த வீடியோ காட்சிகளிள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுளள்ன. குறித்த வீரர் 3 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தபோது திடீரென ஆடுகளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வ மரண பரிசோதனை முடிவுகள் இன்னும் வராத நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வீரர்கள், போட்டி அமைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் துயர நிகழ்வைத் தொடர்ந்து, தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தையும் அமைப்பாளர்கள் உடனடியாக ரத்து செய்துள்ளனர்.