சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான இறுதி 32 அணிகளுக்கான சுற்றில், ஈக்குவடோர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய தொடரை நடத்தும் இணை நாடான மெக்சிகோ, ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோ அணி உலகக் கிண்ண விலகல்…
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான இறுதி 32 அணிகளுக்கான சுற்றில், ஈக்குவடோர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய தொடரை நடத்தும் இணை நாடான மெக்சிகோ, ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோ அணி உலகக் கிண்ண விலகல் முறையிலா அசுற்றில் கால்பதிக்க 40 ஆண்டுகளாக நீடித்த தங்களது நீண்ட கால சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
1986ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் பல்கேரியாவை வீழ்த்தியதற்குப் பிறகு, உலகக் கிண்ண விலகல் முறையிலான சுற்றில் மெக்சிகோ பெறும் முதலாவது வெற்றி இதுவாகும்.
போட்டியின் முக்கிய திருப்புமுனைகள்:
கிஞ்ஞோனெஸின் அதிரடி கோல் (22ஆவது நிமிடம்): போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோவுக்கு 22ஆவது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. றொபர்ட்டோ அல்வராடோ கொடுத்த துல்லியமான பந்தைப் பெற்ற ஹூலியன் கிஞ்ஞோனெஸ் (ஈக்குவடோரின் பலத்த தற்காப்பை மீறி பந்தை கோல் வலையின் மேல் மூலைக்குள் அதிரடியாகத் திணித்து மெக்சிகோவை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். நடப்புத் தொடரில் அவருக்கு இது 3ஆவது கோலாகும். றாவுல் கிமென்ஸின் வரலாற்று மைல்கல் (31ஆவது நிமிடம்): அடுத்த 9 நிமிடங்களில் ஈக்குவடோர் செய்த தவற்றைச் சாதகமாக்கி மெக்சிகோ தனது இரண்டாவது கோலை அடித்தது. கிஞ்னோனெஸுடன் இணைந்து பந்தைப் பரிமாற்றிய கிமென்ஸ், தனது 47ஆவது சர்வதேச கோலைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் மெக்சிகோ அணியின் அதிக கோல் அடித்தவரான ஸ்க்ற்வியர் ஹெர்னாண்டஸின் சாதனையை முறியடிக்க அவர் இன்னும் 5 கோல்கள் மட்டுமே பின் தங்கியுள்ளார். பீலேயின் சாதனையை நெருங்கிய 17 வயது இளம் புயல்: இப்போட்டியில் 17 வயதேயான கில்பர்டோ மோரா ஆரம்ப வரிசை வீரராகக் களம் இறங்கினார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஆரம்ப வரிசையில் களம் இறங்கிய பிரேசில் ஜாம்பவான் பீலேயின் சாதனைக்குப் பிறகு, அந்தப் பெருமையைப் பெற்ற இளம் வீரர் என்ற சாதனையை மோரா படைத்தார். அவர் மைதானத்தை விட்டு வெளியேறும்போது இரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர். ஈக்குவடோரின் ஏமாற்றமும் சிவப்பு அட்டையும்: போட்டியின் இறுதிப் பகுதியில் ஈக்குவடோர் அணி கோல் அடிக்கப் போராடிய போதிலும், நடப்புத் தொடரில் இதுவரை ஒரு கோல் கூட வாங்காத மெக்சிகோவின் பலத்த தற்காப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. போட்டியின் இறுதி நிமிடங்களில் எக்குவடோரின் பியரோ ஹின்காபி மெக்சிகோவின் சான்டியாகோ கிமினெஸுடன் வாதிடும் போது தனது வாயைக் கையால் மூடிப் பேசியதன் காரணமாக மத்தியஸ்தரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மெக்சிகோ அணி, அடுத்த சுற்றில் இங்கிலாந்து அல்லது கொங்கோ ஜனநாயகக் குடியரசு அணியை இதே அஸ்டெகா மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

