சீனாவின் மிக உயரமான வானளாவிய கட்டடமான சிடிக் டவரில் சிறிய ரக விமானத்தை மோதி விபத்தை ஏற்படுத்திய விமானி, நாள்பட்ட தூக்கமின்மை மற்றும் மனக்கவலையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தன் "தனிப்பட்ட காரணங்களுக்காகவே" இந்த செயலைச் செய்துள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். க…

சீனாவின் மிக உயரமான வானளாவிய கட்டடமான சிடிக் டவரில் சிறிய ரக விமானத்தை மோதி விபத்தை ஏற்படுத்திய விமானி, நாள்பட்ட தூக்கமின்மை மற்றும் மனக்கவலையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தன் "தனிப்பட்ட காரணங்களுக்காகவே" இந்த செயலைச் செய்துள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நடந்த இந்த பயங்கர விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்துக்குள்ளான விமானம்விபத்தை ஏற்படுத்திய 66 வயதான லியு என்பவர் பீஜிங்கில் தனியாக வசித்து வந்த ஒரு விவாகரத்தான நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது நாட்குறிப்பை (Diary) சோதித்ததில், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வது குறித்த பல குறிப்புகள் எழுதப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இது பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஒரு தனிநபர் சார்ந்த விவகாரம் என விசாரணைக்குப் பின் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

விபத்தன்று பிங்கு மாவட்ட விமான நிலையத்திலிருந்து அரோரா எஸ்ஏ60எல் என்ற இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தில் லியு தனியாகப் பறந்துள்ளார்.

அப்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட வான்வழிப் பகுதியை விட்டு விலகி, விமான நிலையத்துடனான தொடர்பை இழந்த அவர், 109 அடுக்குமாடிகளைக் கொண்ட சிடிக் டவர் கட்டடத்தின் மீது விமானத்தை மோதியுள்ளார்.பாதுகாப்பு மீறல் இந்த கட்டிடம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பான காணொலிகள் மற்றும் படங்கள் சீன சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அவை அனைத்தும் அதிகாரிகளால் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.நாட்டின் முக்கியப் பகுதியில் நடந்த இந்த பாதுகாப்பு மீறல் குறித்த செய்திகள் பரவாமல் தடுக்க கடுமையான இணைய தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீனாவில் இலகுரக விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.