பிள்ளையான் உத்தமர் அல்ல, அவர் தொடர்பில் மட்டக்களப்பு மக்கள் உண்மையினை அறிவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (02.07.2026) ஆரம்பித்துவைக்கப்பட்ட அண்மையில் உடைந்து வீழ்ந்த புது பாலத்தின்…
பிள்ளையான் உத்தமர் அல்ல, அவர் தொடர்பில் மட்டக்களப்பு மக்கள் உண்மையினை அறிவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (02.07.2026) ஆரம்பித்துவைக்கப்பட்ட அண்மையில் உடைந்து வீழ்ந்த புது பாலத்தின் தற்காலிக புனரமைப்பிற்கான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.பாலம் புனரமைப்பு மட்டக்களப்பு நகரின் பிரதான பாலங்களில் ஒன்றாக இருக்கின்ற மட்டக்களப்பு புது பாலத்தின் ஒரு பகுதி அண்மையில் திடீரென உடைந்ததன் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துரிதமாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்னாயக்கவுடனும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்திவுடனும் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்துரைக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் போதனா வைத்தியசாலை, பாடசாலைகள் உட்பட பல்வேறு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கான பாதையாக இது காணப்படுவதுடன் வாழைச்சேனை தொடக்கம் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு துரிதமாக கொண்டு செல்லக்கூடிய இடையூறு குறைவான பாதையாகவும் இது காணப்படுகின்றது.
இந்தப் பகுதியில் தற்காலிகமாக பெய்லி பாலம் ஒன்றினை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நேற்று (02) தற்காலிக பெய்லி பாலத்தினை அமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.சீரமைப்புப் பணி இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பில் இருக்கின்ற மிக முக்கியமான பாலமான இந்த 'புதுப்பாலம்' அண்மையில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இடிந்து விழுந்தது.
இதனை உடனடியாகச் சீரமைப்பதற்காக, எங்களது அமைச்சர் விமல் ரத்நாயக்கவை தொடர்புகொண்டு இந்தப் பாலத்தைச் சீரமைத்துத் தருமாறு அவரிடம் கேட்டிருந்தோம். அந்த அடிப்படையிலே, உடனடியாக அதற்கான தீர்வினை அவர் முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து, 'பெய்லி பிரிட்ஜ்' எனச் சொல்லக்கூடிய தற்காலிகப் பாலத்தை உடனடியாக அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வேளைத்திட்டத்தை ஆர்.டி.ஏ மற்றும் ஆர்.டி.டி எனச் சொல்லக்கூடிய வீதி அபிவிருத்தித் திணைக்களங்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.
ஆகவே, துரிதமாக இந்தப் பாலத்தை அமைப்பதனூடாக மட்டக்களப்பு நகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க முடியும்.
அதேபோல, மட்டக்களப்பு வைத்தியசாலைக்குச் செல்லக்கூடிய அண்மித்த ஒரு பாதையாகவும், பாடசாலை மாணவர்கள் பயணிக்கக்கூடிய பாதையாகவும் இந்தப் பாலம் காணப்படுவதனால் அதனைக் கருத்திற்கொண்டு நாங்கள் உடனடியாக இந்தத் தீர்வினை முன்வைத்திருந்தோம்.நகர அபிவிருத்தி அதிகாரசபை
அதற்கு அமைச்சரும், திணைக்களத் தலைவர்களும், எங்களது மாவட்டத்தின் ஆர்.டி.ஏ மற்றும் ஆர்.டி.டி பொறியியலாளர்களும் இணைந்து இதனை முன்னெடுத்திருந்தார்கள். அவர்களுக்கு விசேடமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பத்து நகரங்களை அழகுபடுத்துகின்ற வேலைத்திட்டத்தின் ஊடாக இந்தப் பாலம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.அண்மையிலே நாடாளுமன்றத்திலும், அமைச்சு மட்டத்திலும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு இராஜாங்க அமைச்சரின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதிலே முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட திட்டங்களிலே இந்தப் பாலத்தை நாங்கள் முன்னுரிமைப்படுத்தியிருக்கின்றோம்.இதனையடுத்து உடனடியாக இதன் வேலையை ஆரம்பிக்குமாறு அமைச்சர் பணித்திருக்கின்றார். ஆகவே, அதற்கான நிதி போதுமான அளவுக்கு விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
அத்துடன் அமைச்சர் லால் காந்த அவர்களின் தலைமையிலே, விவசாய சங்கத்தினருடனான ஒரு கலந்துரையாடல் அமைச்சு மட்டத்திலே இடம்பெற்றிருந்தது.அரிசியின் நிர்ணய விலை அதிலே விவசாய சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய, அரிசியின் நிர்ணய விலை 120 ரூபாய் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதேநேரம், அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் ஒப்புதல் வழங்கியிருக்கின்றார்.
உங்களுக்குத் தெரியும், விலையை அதிகரிக்குமாறு சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்திருந்தாலும், இறுதி நுகர்வோர்கள் மக்களே. அந்த நெல்லின் விலையை அதிகரிப்பதனூடாக அரிசியின் விலையும் அதனோடு ஒத்ததாக அதிகரிக்கும்.
இறுதி நிலையிலே மக்களுக்கு அது ஒரு அழுத்தமாகவும் சுமையாகவும் அமைந்துவிடும். ஆகவே, நாங்கள் மாற்றுத் திட்டமாக விலையை அதே மட்டத்தில் நிர்ணயிக்கம் அதேநேரம் விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்தினை ஈடு செய்யும் விதமாக அவர்களுக்கான மானியத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருக்கின்றோம்.
பிள்ளையான் என அழைக்கப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. அவர் தொடர்பாக மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர்.
அண்மைய தினங்களிலே அவர் தொடர்பான ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஒரு பேராசிரியரைக் கொலை செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை இப்போது நீதிமன்றத்திலே விசாரிக்கப்பட்டு வருகின்றார்.பிள்ளையான்
அதனோடு ஒத்ததாக இன்னும் பல குற்றச்செயல்கள் மற்றும் கொலைகளோடு சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணைகள் இப்போது முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது.
அண்மையில் மட்டக்களப்பிலே விசாரணை ஒன்றிற்காக அவர் சென்றிருந்த வேளை எங்களது அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கேலிக்கையாக பேசியிருந்தார்.
அவரது செயல்பாடுகள் எப்படிப்பட்டது என மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். நாங்கள் சரியான முறையிலே எங்களது விசாரணைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றோம்.
நேர்மையாகவும் நீதியாகவும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, நாங்கள் எந்த ஒரு பொய்க் குற்றச்சாட்டுகயையோ, அரசியல் அழுத்தங்கங்களையோ அல்லது அரசியல் பழிவாங்கல்களையோ மேற்கொள்ளவில்லை.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாகத்தான் நாங்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றோம். நீதித்துறையும் பொலிஸாரும் நியாயமாகவும் நீதியாகவும் விசாரணைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றனர்.ஊழல் குற்றச்சாட்டுக்கள்
கடந்த காலங்களிலே உங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்த நாட்டிலே ஊழல் அதிகரித்து இருந்தது.
அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் ஊழல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.அந்த ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை நாங்கள் முன்னெடுத்துக்கொண்டு வருகின்றோம்.
எதிர்வருங்காலங்களில், எங்களது அரசாங்கத்தினால் எந்தவொரு ஊழலும் இடம்பெற வாய்ப்பில்லை.அதேநேரம், சிறந்த ஒரு முறையில் வடிவமைக்கப்பட்ட மற்றும் ஊழல் இல்லாத முறையில் சிறப்பான ஒரு பாலத்தை நாங்கள் அமைப்போம்.
அது மாத்திரமல்ல, இப்போது இடம்பெறுகின்ற ஒவ்வொரு அபிவிருத்தியும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் மண்முனை, வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

