மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, “பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர்” எனத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு புதுப்பாலத்தில் தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர…
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, “பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர்” எனத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புதுப்பாலத்தில் தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்டரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பில் நீதித்துறையும் காவல்துறையும் சுயாதீனமாகவும் நியாயமான முறையிலும் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.
அரசாங்கம் எந்தவொரு அரசியல் பழிவாங்கலையும் மேற்கொள்ளவில்லை என்றும், கிடைத்துள்ள முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது மட்டக்களப்பு புதுப்பாலத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய அவர், பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து, வைத்தியசாலை சேவைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பயணத்திற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நிரந்தர பால நிர்மாணப் பணிகளையும் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

