தென்மேற்கு பிரான்சில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், ஸ்பெயின் எல்லைக்கு அருகிலுள்ள சுமார் 24 கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.இன்றையதினம்(6.7.2026)வீசி வரும் பலத்த காற்று, த…

தென்மேற்கு பிரான்சில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், ஸ்பெயின் எல்லைக்கு அருகிலுள்ள சுமார் 24 கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.இன்றையதினம்(6.7.2026)வீசி வரும் பலத்த காற்று, தீயின் வேகத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பிரான்சின் பெர்பிக்னான் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்களுக்கு உதவ, சைப்ரஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து நான்கு நீர்வீச்சு விமானங்களை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது.காட்டுத்தீ இது குறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தனது எக்ஸ் தளத்தில், "ஐரோப்பா எப்போதும் பிரான்சுடன் துணை நிற்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரெஞ்சு பைரனீஸ் மலை அடிவாரத்தில் உள்ள சுமார் 4,600 ஹெக்டேயர் நிலப்பரப்பு இந்தத் தீயினால் கருகி சாம்பலாகியுள்ளது என்று உள்ளூர் அதிகாரி பியர் ரெக்னால்ட் தெரிவித்துள்ளார்.இந்த தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை வானிலை நிலவரம் மேலும் மோசமடைந்துள்ளதால், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் போராட்டம் மீண்டும் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.