கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற பிறந்த நாள் வைபவமொன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு(04.07.2026) கடவத்தை, இஹல பியன்வில பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.பிறந்த நாள் வைபவத்தில் ஏற்பட்ட மோதல் குறித்த பிரதேச…

கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற பிறந்த நாள் வைபவமொன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு(04.07.2026) கடவத்தை, இஹல பியன்வில பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.பிறந்த நாள் வைபவத்தில் ஏற்பட்ட மோதல் குறித்த பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற பிறந்த நாள் வைபவம் ஒன்றின்போது ஏற்பட்ட மோதலில், பிறந்த நாள் கொண்டாடியவரின் சகோதரர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்தபோது, ​​மற்ற இருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் கூர்மையான ஆயுதத்தால் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. உயிரிழந்தவர் கடவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கடவத்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.