திருகோணமலை - முத்து நகர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் சீனக்குடா பொலிஸாரின் அத்துமீறல்கள் அதிகரித்து விட்டது என்றும் கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் முத்து…

திருகோணமலை - முத்து நகர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் சீனக்குடா பொலிஸாரின் அத்துமீறல்கள் அதிகரித்து விட்டது என்றும் கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முத்து நகர் ஒன்றிணைந்த விவசாய சங்கத்தின் செயலாளர் சஹீலா சபூர்தீன் கருத்து தெரிவிக்கையில்,

முத்து நகர் விவசாயிகளின் காணிகள் சூரிய மின் சக்தி உற்பத்திக்காக கையகப்படுத்தப்பட்டதையடுத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சீனக்குடா பொலிஸாரின் அத்துமீறல்

இதற்காக மாற்றுக்காணி வழங்குவதாக கூறினார்கள், ஆனால் இதுவரையில் அதற்கான தீர்வை அப்பகுதி விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை.

மாறாக, எங்களது விவசாய நிலம் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தி 342விவசாய குடும்பங்களை வீதிக்கு இறங்கியுள்ளனர்.

தற்போது தொழிலின்றி பாரிய பொருளாதார சிக்கலை அப்பகுதியில் வாழும் விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், இரவு நேரத்தில் சீனக்குடா பொலிஸார் தங்கள் விவசாய குடும்பம் ஒன்றின் வீட்டினுள் நுழைந்து அப்பட்டமாக வீட்டை பரிசோதனை செய்துள்ளனர்.

இது அடிப்படை உரிமை மீறலாகும், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அறிந்துள்ளோம் என்றார்.