காலி - எல்பிட்டிய பகுதியில் சந்தேகநபர்களை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று கஹடுவ பகுதிக்கு சோதனைக்காகச் சென்றபோது, சந்தேகநபர்கள் பொலிஸாரை தாக்க முயன்றதால், பொலிஸார் வான…
காலி - எல்பிட்டிய பகுதியில் சந்தேகநபர்களை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று கஹடுவ பகுதிக்கு சோதனைக்காகச் சென்றபோது, சந்தேகநபர்கள் பொலிஸாரை தாக்க முயன்றதால், பொலிஸார் வானத்தை நோக்கிச்சுட்டுள்ளனர்.
இதன்பின்னர், இரண்டு சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் இதன்போது இரண்டு அதிகாரிகள் அவர்களை துரத்திச்சென்ற நிலையில், சந்தேகநபர்களில் ஒருவர், ஒரு பொலிஸ் அதிகாரியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதன்போது பொலிஸார் அவரை சுட்டதில், சந்தேகநபரின் கையில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட நபர், கொலைக்கு உடந்தையாக இருந்தது உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

