முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் ஊடாக பள்ள கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறந்து விடக்கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டமானது இன்று(6.7.2026)முள்ளிக்குளம் மக்களினால் முள்ளிக்குளம் பிரதான பாதையில்…

முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் ஊடாக பள்ள கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறந்து விடக்கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டமானது இன்று(6.7.2026)முள்ளிக்குளம் மக்களினால் முள்ளிக்குளம் பிரதான பாதையில் முன்னெடுக்கப்பட்டது.பள்ள கண்டன் புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம் யூலை மாதம் 8 ஆம் திகதி இடம் பெற்று தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு யூலை மாதம் 12ஆம் திகதி திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுகின்றமை வழமை.துரித நடவடிக்கை

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக திருவிழா திருப்பலி இடம் பெற்று வந்த நிலையில் மக்கள் எவ்வித அசௌகரியங்கள் இன்றி குறித்த பாதையூடாக பள்ளங்கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று வந்தனர். இந்த நிலையில் தற்போது மன்னார் முள்ளிக்குளம் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் வழியாக பள்ள கண்டல் ஆலயத்திற்கு செல்ல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அனுமதி மறுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பாதையூடாக தாம் பள்ளகண்டல் ஆலயத்திற்கு செல்ல 30 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்.தற்போது தம்மை அனுராதபுரம் பாதையூடாக செல்லுமாறு கூறுவதாகவும் அப்படி சென்றால் 250 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

அரசாங்கம் குறித்த விடயத்தில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.