எல்ல – வெல்லவயா பிரதான வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில், பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 15 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மே…
எல்ல – வெல்லவயா பிரதான வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில், பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 15 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.விசேட சோதனை நடவடிக்கை இந்த நிகழ்வை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, ஹெரொயின்,
'ஐஸ்' (கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்) மற்றும் போதை மாத்திரைகள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இகைது செய்யப்பட்ட 15 பேரும் இன்று பண்டாரவளை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

