செய்திகள் 06 February 2026 பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் விரைவான அபிவிருத்திக்குள் நுழையும் நாடாக இலங்கை உலகத்தின் அவதானத்திற்கு உட்பட்டுள்ளது. - இலங்கையின் கொலம்பிய நாட்டின் தூதுவர் பியூகோ ஜரமில்லோ செய்திகள் 06 February 2026 பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் விரைவாக அபிவிருத்திப்…

செய்திகள்

06 February 2026

பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் விரைவான அபிவிருத்திக்குள் நுழையும் நாடாக இலங்கை உலகத்தின் அவதானத்திற்கு உட்பட்டுள்ளது. - இலங்கையின் கொலம்பிய நாட்டின் தூதுவர் பியூகோ ஜரமில்லோ

செய்திகள்

06 February 2026

பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் விரைவாக அபிவிருத்திப் பாதையில் நுழையும் நாடாக இலங்கை உலகின் அவதானத்தை ஈர்த்துள்ளதாகவும் ஜனாதிபதியின் சுதந்திர தின உரையில் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் தற்போதைய அரசாங்கத்தில் உற்சாகம் பிறந்துள்ளதாகவும் இலங்கை பெற்றுள்ள பொருளாதார வெற்றி தொடர்பாக சந்தோசப்படுவதாகவும்   இலங்கையின் கொலம்பியத் தூதுவர் விக்டர் ஹியுகோ ஜரமில்லோ தெரிவித்தார். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்  அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேயை அமைச்சு வளாகத்தில் நேற்று (05) இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் கிராமியப் பொருளாதாரத் துறையில் பொது அனுபவமும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.