பொசன் பௌர்ணமி பொயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தற்போது வரை 18,000க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை (27) மாலை வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 18,129 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக…

பொசன் பௌர்ணமி பொயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தற்போது வரை 18,000க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை (27) மாலை வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 18,129 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார். சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நாளையும் (29) நாளை மறுதினமும் (30) நடத்தப்படும் தானங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பொசன் வலயங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் தற்காலிக மற்றும் நிரந்தர வர்த்தக நிலையங்களை இந்த வாரம் முழுவதும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்முறை அனுராதபுரம் புண்ணிய பூமியை மையமாகக் கொண்டு நேற்று சனிக்கிழமை (27) வரை 200க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சாமில் முத்துகுட தெரிவித்தார். அனுராதபுர நகரசபையின் சுகாதாரப் பிரிவினரால் உணவு சுகாதாரம் மற்றும் தொற்றுநோய்களைத் தடுப்பது குறித்து அந்த நகர சூழலில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தானசாலைகள் அமைப்பாளர்களுக்குத் தேவையான முறையான வழிகாட்டல்களும் அறிவுறுத்தல்களும் நகரசபை சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, தான ஏற்பாட்டாளர்கள் அனைவரும் சுகாதார விதிகளுக்குக் கட்டுப்பட்டு பொறுப்புடன் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துகுட மேலும் தெரிவித்துள்ளார்.