பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 7,215 தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளைத் திருத்திய பின்னர் தொடர்ந்து செயல்படுவதற்காக 131 தன்சல்கள…

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 7,215 தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளைத் திருத்திய பின்னர் தொடர்ந்து செயல்படுவதற்காக 131 தன்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சுகாதாரத் தரநிலைகளை பூர்த்தி செய்யாத வகையில் தயாரிக்கப்பட்டிருந்த 4 குளிர்பான தன்சல்களின் செயற்பாடுகளைத் தடை செய்யவும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொசன் பூரணையை முன்னிட்டு நாடு முழுவதும் மொத்தம் 18,412 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், இன்றும் நாளையும் நடைபெறும் தன்சல்களும் தொடர்ந்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பொசன் வலயங்களைச் சூழவுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக வர்த்தக நிலையங்களும் பொசன் வாரம் முழுவதும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.