உலகளாவிய புலிகள் வலையமைப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கம் தான் செய்துகொண்ட உடன்படிக்கைகளின்படி, இராணுவ வீரர்களை பொய்க் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையிலடைத்துள்ளதாகவும் விமல்…
உலகளாவிய புலிகள் வலையமைப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கம் தான் செய்துகொண்ட உடன்படிக்கைகளின்படி, இராணுவ வீரர்களை பொய்க் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையிலடைத்துள்ளதாகவும் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,சுரேஷ் சலே மீது பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி சிறையிலடைத்துள்ளனர்
"இதற்கு முன்னர் கடற்படை முன்னாள் தளபதி நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டனர்.
அதன் பின்னர், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி சிறையிலடைத்துள்ளனர். தற்போது வசந்த கரன்னாகொடவிடம் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, உலகளாவிய புலிகள் வலையமைப்புக்கு அந்த மகிழ்ச்சியை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கிறது.
மறுபுறம், மக்களுக்கு உள்ள எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாத, பாழடைந்த தொடருந்து பாதையை புனரமைத்து கண்டிக்கு தொடருந்தை அனுப்பக் கூட முடியாத, பழைய பேருந்து நிலையங்களுக்கு வண்ணம் பூசி மகிழ்ச்சியடையும் ஒரு மந்தமான அரசாங்கமே நாட்டில் உள்ளது.
தங்களுக்கு சவாலாக அமையக்கூடிய நபர்களை இலக்கு வைத்து பழிவாங்குவதையே இந்த அரசாங்கம் தற்போது செய்து வருகின்றது. இதன் மூலம் மக்களின் பேச்சு சுதந்திரத்தை முடக்கவே பார்க்கிறார்கள்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளான ஷானி அபேசேகர போன்ற, தேசிய மக்கள் சக்தியின் மேடைகளில் இருந்தவர்களைப் பயன்படுத்தியே காவல்துறை மூலமாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் தங்களுக்கு சாதகமாகச் செயல்படும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் காலத்தை நீடித்துக் கொடுத்து, நீதிமன்ற கட்டமைப்பைத் தங்களுக்குத் தேவையானவாறு பயன்படுத்த முனைகிறது.
எவர் மீதாவது பொய்க் குற்றச்சாட்டுகளை உருவாக்கி, அவர்களைக் கைது செய்து, மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதே இந்த அரசாங்கத்தின் இறுதி நோக்கம் என்றும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

