தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வருவதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பணமோசடி தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மத்தி…

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வருவதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பணமோசடி தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய வங்கியின் விசேட குழுவிற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் நீதிமன்றக் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் நாட்டின் காணி மற்றும் முக்கிய சொத்துக்கள் சந்தேக நிதிகளால் வாங்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மூலம் முக்கிய இடங்கள் மற்றும் சொத்துக்கள் குறைந்த விலையில் கைமாறும் நிலை உருவாகும் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் கைது அரசியல் பழிவாங்கலின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.