பழைய திருடர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் அதேநேரம் புதிய திருடர்களுக்கு சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாப்பு வழங்கும் இரட்டை நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி விமர்சித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் அரசாங்கத்தின் செயல…
பழைய திருடர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் அதேநேரம் புதிய திருடர்களுக்கு சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாப்பு வழங்கும் இரட்டை நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி விமர்சித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் அரசாங்கத்தின் செயல்பாடு மற்றும் அதன் அரசியல் பாதை குறித்து பல்வேறு விமர்சனக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராகப் பல வினாக்களையும் எழுப்பியுள்ளார்.
அவரது கருத்தின் பிரகாரம், அரசாங்கத்தின் மீது ஒரு குறிப்பிட்ட அளவிலான ஏமாற்றம் தலையெடுத்து வருவதாகத் தெரிகிறது.சீர்திருத்தங்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட தீவிரமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் நடைபெறுவதாகத் தெரியவில்லை என்று நிர்மல் சுட்டிக்காட்டுகிறார்.
அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள், இலங்கையின் கல்வியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஆழமான மாற்றம் அல்ல என்றும், அந்தத் திட்டம் தோல்வி நிலையில் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
போக்குவரத்துத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் 'மேலோட்டமான' தீர்வுகளை மட்டுமே வழங்கி வருவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். போக்குவரத்து விதிகள் மற்றும் சாரதிகளுக்கான ஒழுக்கம் போன்ற கட்டமைப்பு மாற்றங்களுக்குப் பதிலாக, புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவது போன்ற மேலோட்டமான விஷயங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன என்ற கருத்தை அவர் கொண்டுள்ளார்.

