புதிய வாகனங்களுக்கு அனுமதி! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, அவற்றின் பணிகளை முறையாக முன்னெடுக்கும் நோக்கில் புதிய பயன்பாட்டு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்க…
புதிய வாகனங்களுக்கு அனுமதி!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, அவற்றின் பணிகளை முறையாக முன்னெடுக்கும் நோக்கில் புதிய பயன்பாட்டு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கமைய, முதற்கட்டமாக 175 டபள் கெப் (Double Cabs) வாகனங்கள், 100 நோயாளர் காவு வண்டிகள், 100 உந்துருளிகள் மற்றும் 160 டிப்பர் ரக வாகனங்கள் போன்ற வாகனங்களை புதிய கொள்வனவு நடைமுறைகளின் கீழ் அவசரமாகக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த வாகனக் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

