2006 முதல் 2014 வரையான காலப்பகுதியில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக ராஜபக்ச குடும்பத்தினர் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டு…
2006 முதல் 2014 வரையான காலப்பகுதியில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக ராஜபக்ச குடும்பத்தினர் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாட்டு கடன்கள் 6% முதல் 9% வரை அதிக வட்டி விகிதத்தில் பெறப்பட்டு, அவற்றில் கமிஷன் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் மற்றும் பல்வேறு சாலை அபிவிருத்தித் திட்டங்களில் திட்ட மதிப்பை விட பல மடங்கு அதிக செலவுகள் காட்டப்பட்டு ஊழல் இடம்பெற்றதாகவும் சந்திரிகா குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடையவர்களின் நிர்வாகத்தில் சென்ற பின்னர் பெரும் நட்டத்தை சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அரச கொள்முதல் நடவடிக்கைகளில் கடுமையான டெண்டர் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், ஊழல் குற்றச்சாட்டு எழும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 24 மணி நேரத்துக்குள் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், காவல்துறை மற்றும் நீதித்துறை அரசியல் தலையீடு இன்றி சுயாதீனமாக செயல்பட வேண்டும் எனவும், நாட்டின் நிர்வாக அமைப்பில் “System Change” அவசியம் எனவும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.

