ராஜபக்ச குடும்பத்தின் மிக நம்பிக்கைக்குரியவரான முன்னாள் கடற்படைத் தளபதியும், ஓய்வுபெற்ற அட்மிரலுமான வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டமை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 - 2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, கப்பம் க…
ராஜபக்ச குடும்பத்தின் மிக நம்பிக்கைக்குரியவரான முன்னாள் கடற்படைத் தளபதியும், ஓய்வுபெற்ற அட்மிரலுமான வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டமை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008 - 2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான சந்தேகநபராக இவர்மீது நீண்டகாலமாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் ராஜபக்சக்களின் அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரப் பலத்தின் மூலம் இந்த வழக்கிலிருந்து அவர் தப்பித்து வந்த நிலையில், தற்போது அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைது நடவடிக்கையானது ராஜபக்ச குடும்பத்தினருக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுவதுடன், இறுதிப் போர் மற்றும் அதன் பின்னரான காலத்தில் நடந்த கடத்தல் விவகாரங்களின் பல இரகசியங்கள் அம்பலமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,

