தணமல்வில - உடவலவ வீதியில், தணமல்வில ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (06) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ரம்புட்டான் பழங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். வெள்ளவாய பகுதியை சேர்ந்த…
தணமல்வில - உடவலவ வீதியில், தணமல்வில ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (06) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ரம்புட்டான் பழங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளவாய பகுதியை சேர்ந்த அவர்கள், ரம்புட்டான் பழங்களை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மீது மோதி கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. அதில் பயணம் செய்த 36 வயதுடைய தந்தை (சாரதி), 34 வயதுடைய தாய் மற்றும் 5 வயதுடைய சிறுமி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தணமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தணமல்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.பி. பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசேன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

