இயேசுவின் திருச்சொரூபத்திற்கு அருகில் அமர்ந்து இளம்பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு 'ரீல்ஸ்' செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும், கத்தோலிக்க மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தமிழ்நாடு, நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதிக்கு அ…
இயேசுவின் திருச்சொரூபத்திற்கு அருகில் அமர்ந்து இளம்பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு 'ரீல்ஸ்' செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும், கத்தோலிக்க மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தமிழ்நாடு, நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதிக்கு அருகிலுள்ள புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.பெஞ்ச் ஒன்றில் இயேசு அமர்ந்திருப்பது போன்றதொரு திருச்சொரூபம்
புண்ணியவாளன்புரம் தேவாலயத்தில், பக்தர்கள் தங்களின் துன்பங்களையும் துயரங்களையும் இயேசுவிடம் நேரடியாகப் பகிர்ந்துகொள்வது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துவதற்காக, பெஞ்ச் ஒன்றில் இயேசு அமர்ந்திருப்பது போன்றதொரு தத்ரூபமான திருச்சொரூபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்தச் சிலைக்கு முன்பாக முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி உருக்கமாகப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழமையாகும்.
இந்நிலையில், தேவாலயத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர், இந்த இயேசுவின் சிலைக்கு அருகில் அமர்ந்து, சினிமா பாடலொன்றுக்கு வாயசைத்து, இயேசுவை கொஞ்சுவது போல 'ரீல்ஸ்' காணொளியொன்றைப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

