கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக உடனடி அபராதங்களை விதிப்பதற்கு பதிலாக நேரடியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்து போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவ…

கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக உடனடி அபராதங்களை விதிப்பதற்கு பதிலாக நேரடியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்து போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.வீதி விபத்துகள்

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் சுமார் 1292 உயிரிழப்புகளை ஏற்படுத்திய வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளினால் 1357 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே காலப்பகுதியில் 2512 பாரதூரமான விபத்துகளும், 5059 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் 467 பாதசாரிகளும், 465 உந்துருளி செலுத்துநர்களும் அடங்குவதாக பொலிஸ் தரவுகள் தெரிவித்துள்ளன.

அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவையே வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.