சாவகச்சேரி நகர சபையின் உப தாவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நகர சபை விசேட கூட்டம் கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிரூபத்தை சபையில் கடுமையாக விமர்சித்து,…

சாவகச்சேரி நகர சபையின் உப தாவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நகர சபை விசேட கூட்டம் கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிரூபத்தை சபையில் கடுமையாக விமர்சித்து, அதனை தூக்கி வீசினார் எனும் குற்றச்சாட்டில் நகர சபையின் உபதவிசாளர், வடமாகாண ஆளூநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உபதவிசாளர் பதவி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர் பதவி ஆகியன பறிக்கப்பட்டுள்ளன. சபை அமர்வு ஒத்திவைப்பு இந்நிலையில், ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை மீள பெற கோரி சாவகச்சேரி நகர சபையில் தீர்மானம் நிறைவேற்ற விசேட சபை அமர்விற்கு நேற்று(03.07.2026) நகர பிதா அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது, பெரும்பாலான உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில், சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபையின் 18 உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சியின் ஆறு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினருமாக 10 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

ஏனைய 08 உறுப்பினர்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ சேர்ந்த 06 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 02 உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.