அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் பகுதிகளை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் , நேற்று மாலை குறித்த முதியவர் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது. உயிரிழந…
அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் பகுதிகளை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் , நேற்று மாலை குறித்த முதியவர் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது.
உயிரிழந்தவர், பழைய வளத்தாப்பிட்டி காளி கோவில் வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய மயில்வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 04) காலை சம்மாந்துறை நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

