கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆண் உறுப்பை மனைவியே பிளேடால் கொடூரமாக வெட்டிய அதிர்ச்சிச் சம்பவம் பங்களாதேஷில் அரங்கேறியுள்ளது. பங்களாதேஷ் - பரீத்பூர் (Faridpur) மாவட்டத்தில் உள்ள பங்கா (Bhanga) என்ற…
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆண் உறுப்பை மனைவியே பிளேடால் கொடூரமாக வெட்டிய அதிர்ச்சிச் சம்பவம் பங்களாதேஷில் அரங்கேறியுள்ளது.
பங்களாதேஷ் - பரீத்பூர் (Faridpur) மாவட்டத்தில் உள்ள பங்கா (Bhanga) என்ற பகுதியில் ஜூன் 29, 2026 அன்று அதிகாலையில் இக்கோரச் சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஹனிப் ஷேக் (Hanif Sheikh) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஹனிப் ஷேக்கிற்கும், அவரது மனைவி சுமையா அக்தர் சுமி (Sumaya Aktar Sumi) என்பவருக்கும் இடையே, கணவரின் கள்ளத்தொடர்பு சந்தேகம் காரணமாக நீண்ட நாட்களாக வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று இரவும் இவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், நள்ளிரவில் கணவர் ஹனிப் ஷேக் ஆழ்ந்து நித்திரைக்கொண்டிருந்த வேளையில், ஆத்திரமடைந்த சுமையா அக்தர், கூர்மையான பிளேடைக் கொண்டு கணவனின் ஆண் உறுப்பை திடீரென வெட்டியுள்ளார்.
கணவனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த வீட்டிற்கு ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் துடித்த ஹனிப் ஷேக்கை மீட்ட மக்கள், உடனடியாக அவசர உதவி எண்ணான 999-க்கு தொடர்பு கொண்டு காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கணவனைத் தாக்கிய சுமையா அக்தரை அங்கேயே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
குறிப்பு :
ஆண் உறுப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர், ரத்த வெள்ளத்தில் அலறிக்கொண்டு ஓடும் காட்சிகள், கேரளாவில் நடந்த சம்பவம் என்ற தவறான மதவாதக் கருத்துகளுடன் (communal claims) சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மேலும், அந்த வதந்திகளில், தன் மூன்று மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, அம் மகள்கள் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பிற பெண்களுடன் இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு குறித்த தகராறைத் தொடர்ந்து, ஜூன் 29 அன்று பங்களாதேஷ் நாட்டின் பரீத்பூரில் ஒரு மனைவி தனது கணவனின் ஆண் உறுப்பைத் துண்டித்ததே உண்மைச் சம்பவம் என்று 'BOOM' உண்மை பரிசோதிப்பு செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

