கருணா மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குச் சென்றபோது, அவரது முக்கிய தளபதிகள் கைவிடப்பட்டு, பின்னர் புலிகளிடம் சரணடைந்த நிகழ்வுகள், கருணா ஆரம்பத்திலேயே திட்டமிட்டுப் பிரியவில்லை என்பதை உணர்த்துகின்றன. கருணா களமுனையில் தோல்வியைச் சந்தித்த பிறகு, கொழும்பில் கூடிய பாதுகாப்புச் சபைக்…

கருணா மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குச் சென்றபோது, அவரது முக்கிய தளபதிகள் கைவிடப்பட்டு, பின்னர் புலிகளிடம் சரணடைந்த நிகழ்வுகள், கருணா ஆரம்பத்திலேயே திட்டமிட்டுப் பிரியவில்லை என்பதை உணர்த்துகின்றன.

கருணா களமுனையில் தோல்வியைச் சந்தித்த பிறகு, கொழும்பில் கூடிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், கருணாவை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் பயன்படுத்த இலங்கை அரசு தீர்மானித்தது.இதன்பின்னர், 'கருணா குழு' என்ற பெயரில் ஒரு நிழல் யுத்தத்தை நடத்த இலங்கை இராணுவப் புலனாய்வுத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது

தனது முழு கவனமும் தேர்தல் வெற்றி மற்றும் ஆட்சி அமைப்பதில் இருந்ததால், புலிகளை நேரடியாகக் கோபப்படுத்தும் அல்லது அமைதியை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்க ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விரும்பவில்லை.

கருணாவை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது விடுதலைப்புலிகளுடன் நேரடிப் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால், அரசியல் ரீதியாக அது தனக்குச் சாதகமாக இருக்காது என்று அவர் கருதினார்.

இருப்பினும், கருணா களமுனையில் படுதோல்வி அடைந்த பிறகு, கொழும்பில் கூடிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ராணுவ உயரதிகாரிகள் இந்தத் தயக்கத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.

கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பை அரசாங்கம் தவறவிட்டுவிட்டதாக அவர்கள் ஆதங்கப்பட்டனர்.

அதன் பின்னரே, கருணாவை ஒரு 'துருப்புச் சீட்டாக' பயன்படுத்தி நிழல் யுத்தத்தைத் தொடர அரசு ரகசியமாக முடிவெடுத்தது.

இந்த விடயங்கள் தொடர்பிலான விடயங்களை சுமந்து வருகின்றது உண்மைகள் நிகழ்ச்சி...