நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக மிக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்குத் தயாராகி வருவதாாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் எதிர்க்க…

நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக மிக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்குத் தயாராகி வருவதாாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வரைவு செய்யும் பொறுப்பு, எதிர்க்கட்சியில் உள்ள சட்டத்தரணிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை சபாநாயகர் மீறியுள்ளார் என்று குற்றம் சாட்டியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் எட்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவை வழங்கத் தவறியதன் மூலம், சபாநாயகர் அரசியலமைப்பை மீறியுள்ளார் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பான விபரங்களை எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போதிலும், சபாநாயகர் அதில் கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்படும் கடிதங்களை ஏற்பதற்கும் சபாநாயகர் மறுப்புத் தெரிவித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.