பாதாள உலகக் கும்பலின் தலைவர் ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்க விவகாரம் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளராக இருந்த சரித…
பாதாள உலகக் கும்பலின் தலைவர் ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்க விவகாரம் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளராக இருந்த சரித் அபேசிங்க, மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்திருந்த ஹரக் கட்டா என்றழைக்கப்படும் பாதாள உலகக்கும்பல் தலைவனிடமிருந்து பெரும் தொகைப் பணம் இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இலஞ்ச விவகாரம் இந்த நிலையில் அவர் இலஞ்ச விவகாரத்தில் சிக்கியதை அடுத்து அவரது கட்சிக்குள் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் காரணமாகக் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ள நிலையில், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சரித் அபேசிங்க போன்ற நபர்கள் இதற்கு முன்னர் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்திருந்தும், அவரைக் கட்சிக்குள் உள்வாங்கிய குழு மீது உடனடியாக ஒரு ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை நடத்துமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளாகக் கட்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் நபர்களைப் புறம் தள்ளி, இத்தகைய நபர்களுக்கு எந்தவொரு பரீட்சிப்பும் இன்றி கட்சியில் உயர் பதவிகள் வழங்கப்பட்டமை குறித்து அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கட்சியில் உள்ள ஒரு சக்திவாய்ந்த தொழிலதிபரின் தலையீட்டின் காரணமாகவே சரித் அபேசிங்க கட்சிக்குள் உள்வாங்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.இலஞ்ச ஊழல் விசாரணை அவர் கட்சியில் சேர்ந்து 24 மணி நேரம்கூட நிறைவடைவதற்கு முன்பே, கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான செயற்குழுவில் அவருக்கு வழங்கப்பட்ட நியமனத்தின் பின்னணியில் ஏதேனும் பேரம் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கட்சிக்காக எந்தப் பணியும் செய்யாத ஒருவருக்கு இத்தகைய சலுகைகள் வழங்குவது கட்சியின் அடையாளத்திற்குப் பாதகமானது என்று அவர்கள் கருதுகின்றனர்.
இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சரித் அபேசிங்கவை அவரது கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும், அவர் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர் பகுஜன பலய அமைப்பின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

