இலங்கையில் பிரபலமான கொத்து உணவகம் ஒன்றின் உரிமையாளரார் விராஜ் விக்ரமநாயக்க, தனது ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியான சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி தொடர்பில் அவசர விசாரணை நடத்துமாறு தொழில் அமைச்சகம்,…
இலங்கையில் பிரபலமான கொத்து உணவகம் ஒன்றின் உரிமையாளரார் விராஜ் விக்ரமநாயக்க, தனது ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியான சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி தொடர்பில் அவசர விசாரணை நடத்துமாறு தொழில் அமைச்சகம், தொழிலாளர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. வாய்மொழி மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல் அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றின்படி, உணவக உரிமையாளரால் ஊழியர்கள் வாய்மொழி மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு பிரதி தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்க, ஊழியர் நலன்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்புகள் முறையாகச் செலுத்தப்பட்டதா என்பதையும் இந்த விசாரணையில் ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 12 கிளைகளில் இயங்கி வரும் உணவகம் தொடர்பில் அதிகாரிகளால் கூட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, சமீபத்திய மாதங்களில் சில கிளைகள் மூடப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவுஇந்த கிளைகள் மூடப்பட்ட நேரத்தில், தொழிலாளர்களுக்குச் சட்டப்படி சேர வேண்டிய பிற கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதா என்பதை சரிபார்க்குமாறு பிரதி அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். பணியிட பிரச்சினைகள் மற்றும் தொழிற்துறை தகராறுகள் தொடர்பில் ஊழியர்களின் கருத்துக்களையும் பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை ஜூலை 7ஆம் திகதிக்குள் தமக்குச் சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

