சிறுமியொருவர் வயல்வெளியில் செல்லப்பிராணியாக குட்டி முள்ளம்பன்றி ஒன்றை கூட்டிச்செல்லும் நெகிழ்ச்சியான காணொளியொன்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இதயங்களை கவர்ந்துள்ளது. இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இலங்கை காணொளி இந்த காணொளி பங்களாதேஷில் படம…
சிறுமியொருவர் வயல்வெளியில் செல்லப்பிராணியாக குட்டி முள்ளம்பன்றி ஒன்றை கூட்டிச்செல்லும் நெகிழ்ச்சியான காணொளியொன்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இதயங்களை கவர்ந்துள்ளது.
இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இலங்கை காணொளி இந்த காணொளி பங்களாதேஷில் படமாக்கப்பட்டதாக தவறான கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்த நிலையில்,பின்னர் இது இலங்கையில் பதிவு காணொளி என்பது கண்டறியப்பட்டது.இந்த காணொளியில் உள்ள சிறுமி, இரண்டாம் வகுப்பில் படிக்கும் பொலன்னறுவையை சேர்ந்த ஏழு வயது ஸ்வேதா புன்சண்டி ஆவார். இது தொடர்பில் சிறுமியின் தாயார் விளக்கமளிக்கையில், ஸ்வேதாவுக்கு எப்போதும் விலங்குகள் மீது அதிக பாசம் உண்டு, மேலும் அவற்றுடன் ஒரு தனித்துவமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தங்கள் குடும்பம் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தாலும், இயற்கையால் சூழப்பட்டிருப்பதால், ஸ்வேதா வனவிலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் வளர முடிகிறது.
விலங்குகள் தங்களுக்குரிய வழியில் தொடர்பு கொள்ள முடியும் என்று அவர் நம்புகிறார், மேலும் தனது மகள் அவற்றைப் புரிந்துகொண்டு அவற்றுடன் பழகி வருவதாக கூறுகிறார்.
வீட்டிற்கு அருகில் காயமடைந்த நிலையில் அந்த முள்ளம்பன்றியை பார்த்தோம். பிறகு அதனுடனான நட்பு தொடங்கியது. நிஜ வாழ்க்கை டிஸ்னி தருணம் நாய்கள் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு பயந்து வீட்டிற்கு அருகில் உலோக தகடுகளின் குவியலுக்குள் ஒளிந்திருந்த முள்ளம்பன்றியை பார்த்தோம். அந்த முள்ளம்பன்றி காயமடைந்திருந்த நிலையில் குணமடையும் வரை, வீட்டில் இருந்த மருந்துகளை கொண்டு பல நாட்கள் அதற்கு சிகிச்சையளித்தோம். குணமடைந்த பிறகு, அந்த முள்ளம்பன்றி காட்டுக்கு திரும்பியது, ஆனால் தொடர்ந்து எங்கள் குடும்பத்தினரைச் சந்தித்து வந்தது. அது படிப்படியாக ஸ்வேதாவுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தி பழகிவிட்டது.
நாங்கள் அதனை கூண்டில் அடைத்து வைப்பதில்லை. அது காட்டில் சுதந்திரமாக சுற்றித்திரியவும், தானாகவே திரும்பி வரவும் பழகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஸ்வேதா, காட்டு முள்ளம்பன்றி மற்றும் பூனை ஆகியவற்றுக்கு இடையேயான இந்த நெகிழ்ச்சியான நட்பை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளதுடன், பலர் இதை ஒரு நிஜ வாழ்க்கை டிஸ்னி தருணம் என்று வர்ணித்து வருகின்றனர்.

