இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் (15 ஆண்டுகள் மற்றும் 99 நாட்கள்) சர்வதேச போட்டிக்குள் கால்பதித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.இதற்கு முன்னர் ஆண்க…

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் (15 ஆண்டுகள் மற்றும் 99 நாட்கள்) சர்வதேச போட்டிக்குள் கால்பதித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.இதற்கு முன்னர் ஆண்களுக்கான கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரும் (16 ஆண்டுகள் 205 நாட்கள்), மகளிருக்கான கிரிக்கெட்டில் ஷெஃபாலி வர்மாவும் (15 ஆண்டுகள் 239 நாட்கள்) தன்வசம் வைத்திருந்த சாதனைகளை முறியடித்து, ஒட்டுமொத்த இந்திய அளவில் இந்த வரலாற்றுப் பெருமையை அவர் தன்வசமாக்கியுள்ளார்.

மென்செஸ்டரில் நடைபெற்ற இந்த போட்டியில் திலக் வர்மாவிடமிருந்து அவர் தனது அறிமுகத் தொப்பியைப் பெற்றுக்கொண்டார்.

சமீபத்தில் நிறைவடைந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 776 ஓட்டங்களைக் குவித்து செம்மஞ்சள் தொப்பியைக் (Orange Cap) கைப்பற்றியதுடன், தொடரின் வளர்ந்து வரும் வீரர் மற்றும் தொடர் நாயகன் (MVP) உள்ளிட்ட பல விருதுகளையும் வென்று அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.