சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி நீர் அருந்தினார். ஆனால் 25 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுரேஸ் சலே ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. அது ஆச்சரியமானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறும…

சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி நீர் அருந்தினார். ஆனால் 25 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுரேஸ் சலே ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. அது ஆச்சரியமானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மனவலிமை அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சலே உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு விட்டார் என்று அனைவரும் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் 25 நாட்கள் எவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவுள்ளது.

சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி நீர் அருந்தினார். ஆனால் 25 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுரேஸ் சலே ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. அது ஆச்சரியமானது.

சுரேஸ் சலே ஒரு இராணுவ அதிகாரி என்பதால் மன உறுதியுடன் நீரின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.அது அவரது மனவலிமையை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.