தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் ஒருசில வாரங்களுக்கு முன்பு, நான் அரசியலுக்கு வரலாமா என்று கேட்டு சமூக வலைத்தளத்தில் ஒரு காணொளி வெளியி…

தமிழக   சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் ஒருசில வாரங்களுக்கு முன்பு, நான் அரசியலுக்கு வரலாமா என்று கேட்டு சமூக வலைத்தளத்தில் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று வெளியிட்டிருக்கும் காணொளியில், தான் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடவில்லை காணொளியில்,

இரண்டு விவகாரங்கள் குறித்து தெளிவுபடுத்தவே இந்த காணொளி, ஒன்று திருச்சி கிழக்குத் தொகுதி, மற்றொன்று, செய்தியாளர் சந்திப்பில் நான் சொன்ன ஒரு வார்த்தை சர்ச்சையானது பற்றியும்தான்.

செய்தியாளர் சந்திப்பின்போது நான் சொன்ன தெரு நாய்கள் விவகாரம் சர்ச்சையாகிவிட்டது. அது குறித்து எழுத்துப்பூர்வமாக எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துவிட்டு என் வேலையை பார்க்கச் சென்றுவிட்டேன்.

என்னுடைய நலம் விரும்புவோர் பலரும், தெரு நாய்கள் குறித்து பேசியதற்கு விளக்கமாக காணொளி வெளியிடுமாறு கூறினார்கள்.

பிறகு, அரசியலுக்கு வருவதாக இருந்தால் வர வேண்டியதுதானே? அதனை ஏன் மக்களிடம் கேட்க வேண்டும் என்றும் பலரும் சொல்கிறார்கள். என் சொந்தங்களிடம் நான் கேட்பது போலத்தான் மக்களிடமும் கேட்கிறேன். நீ அறக்கட்டளையை மட்டும் பார், அரசியலுக்கு வர வேண்டாம் என்று மக்கள் நினைத்தால். அதனால்தான் அவர்களிடம் கேட்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.