சட்டவிரோதமாகப் பசுக்களைக் கொன்று இறைச்சியாகச் சந்தைப்படுத்தப்படவிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, வலாலன மத்திய ஊழல் எதிர்ப்புத் தாக்குதல் பிரிவின் அதிகாரிகள், 2026.06.28 அதிகாலை மகாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாபாகே வடக்கு பகுதியில் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர். அங்க…

சட்டவிரோதமாகப் பசுக்களைக் கொன்று இறைச்சியாகச் சந்தைப்படுத்தப்படவிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, வலாலன மத்திய ஊழல் எதிர்ப்புத் தாக்குதல் பிரிவின் அதிகாரிகள், 2026.06.28 அதிகாலை மகாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாபாகே வடக்கு பகுதியில் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர்.

அங்கு மிருக வதை, கால்நடை வைத்தியரின் அனுமதியின்றி 13 பசுக்கள் மற்றும் ஒரு கன்றுக்குட்டியைப் பலியிட்டமை, முறையான ஆவணங்கள் இன்மை மற்றும் 5,000 கிலோகிராமிற்கும் அதிகமான மாட்டிறைச்சியுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மகாபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் ஜா-எல, வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ மற்றும் கொழும்பு- 02 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47, 50 மற்றும் 58 வயதுடையவர்கள் ஆவர். மகாபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.