சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இன்று (04) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.…

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இன்று (04) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

சவூதி அபிவிருத்தி நிதியத்தின் (Saudi Fund for Development – SFD) 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ பீட வளாகத்தில் நவீன கல்வி வசதிகளுடன் மாணவர் விடுதிகள், நூலகம், 1,000 ஆசனங்களைக் கொண்ட கேட்போர் கூடம் மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

இது இலங்கையின் 10ஆவது மருத்துவ பீடமாக அமைந்துள்ளதுடன், மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு, நாட்டில் நிலவும் சுகாதாரத் துறை நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.