சவூதி நிதியில் நிர்மாணமான சப்ரகமுவ மருத்துவ பீடம்; நாளை திறப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதி…
சவூதி நிதியில் நிர்மாணமான சப்ரகமுவ மருத்துவ பீடம்; நாளை திறப்பு
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதி நாளை சனிக்கிழமை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் – கஹ்தானி, சப்ரகமுவ மாகாண ஆளுனர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் முக்கியஸ்தர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த நிதியொதுக்கீட்டிலான மருத்துவ பீடத்திற்கான இந்தக் கட்டிடம், இரத்தினபுரி புதிய நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 70.46 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டின் கீழ் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்றை ஸ்தாபிப்பதற்கு 2019ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.
மொத்த முதலீட்டில் 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் சலுகை கடனாக சவூதி அரேபியாவினால் வழங்கப்பட்டுள்ளது.
மிகுதி 20.46 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ பீடத்தின் பிரதான கட்டிடத்தை நிர்மாணித்தல் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்தல் உள்ளடக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட சலுகை கடன் தொகையினை அபிவிருத்திக்கான சவூதி நிதியத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது.
சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பீடத்திற்கு இம்முறை 162 வைத்தியத்துறை மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

