சுரேஷ் சலேவிடம் இருந்து கடவுச்சொற்களைப் (Passwords) பெறுவதில் அரசாங்கம் காட்டும் மென்போக்கு, அவர் பல முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தாலேயே என்று அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ப…
சுரேஷ் சலேவிடம் இருந்து கடவுச்சொற்களைப் (Passwords) பெறுவதில் அரசாங்கம் காட்டும் மென்போக்கு, அவர் பல முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தாலேயே என்று அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தற்போதைய அரசாங்கம் ஊழலை ஒழிப்பதிலோ அல்லது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகளுக்கான நீதி விசாரணைகள் எப்போதும் நீதியின் அடிப்படையில் அமைவதில்லை என்றும், இவை வெறும் காலத்தை இழுத்தடிக்கும் உத்திகள் மட்டுமே..
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரது கணினியை அல்லது அலைபேசியைத் திறக்க முடியும் என்ற நிலையில், சுரேஷ் சலேவிடம் கடவுச்சொல்லைக் கேட்டு நிற்பது ஒரு தந்திரமான இழுத்தடிப்பு என குறிப்பிட்டார்.
சுரேஷ் சலே மற்றும் பிள்ளையானை இவர்கள் தண்டித்தாலும் அதற்கு மேலுள்ளவர்களை இவர்களும் தண்டிக்க மாட்டடார்கள் என தெரிவித்தார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..

